மியன்மார் ராணுவத் தலைவருக்கு அழைப்பில்லை

மியன்மார் ராணுவத் தலைவருக்கு அழைப்பில்லை

2 mins read
3953150a-5fa5-4a38-a4f7-48cc884d1f86
-

கோலா­லம்­பூர்: இம்­மா­தம் நடை­பெற இருக்­கும் தென்­கி­ழக்­கா­சிய உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­கொள்ள மியன்­மார் ராணு­வத் தலை­வர் மிங் ஆங் ஹிலேங்­கிற்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை.

மாறாக, அந்­நாட்­டி­லி­ருந்து அர­சி­யல் சார்­பற்ற பிர­தி­நிதி ஒரு­வர் உச்­சநிலை மாநாட்­டில் கலந்து கொள்­வார் என்று தெரி­விக்­கப்­

பட்­டுள்ளது.

இந்த முடிவை தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளுக்­கான சங்­கம் நேற்று நடை­பெற்ற அவ­ச­ர­நிலை கூட்­டத்­தில் எடுத்­தது.

இதற்கு முன்பு இத்­த­கைய முடிவை சங்­கம் எடுத்­த­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த ஏப்­ரல் மாதம் மியன்­மா­ரில் அமைதி திரும்­பு­வ­தற்­காக வகுக்­கப்­பட்ட திட்­டத்­துக்கு உட்­

ப­டப் போவ­தாக மியன்­மார் உறுதி அளித்­தி­ருந்­தது.

ஆனால் கொடுத்த வாக்­

கு­று­தியை மியன்­மாரை ஆட்சி செய்து வரும் ராணு­வம் நிறை­வேற்­ற­வில்லை.

மியன்­மா­ரில் நடந்­து­வ­ரும் வன்­மு­றைச் சம்­ப­வங்­களை முடி­வுக்­குக் கொண்டு வர ஆசி­யான் கூடு­தல் பங்­காற்ற வேண்­டும் என அனைத்­து­லக அள­வில் அழுத்­தம் கொடுக்­கப்­ப­டு­கிறது.

கடந்த பிப்­ர­வரி மாதம் மியன்­மார் ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தி­லி­ருந்து அதற்கு எதி­ராக மியன்­மார் மக்­கள் ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கி­யுள்­ள­னர்.

இது­வரை 1,000க்கும் மேற்­பட்­டோரை மியன்­மார் பாது­காப்­புப் படை­யி­னர் கொன்­று­விட்­ட­தாக ஐநா தெரி­வித்­துள்­ளது.

"மியன்­மா­ரில் அமைதி இன்­னும் திரும்­ப­வில்லை. எனவே நாட்­டில் நிலவி வரும் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண மியன்­மா­ர் ஆட்­சி­

யா­ளர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்­டும் என்று ஆசி­யான் உறுப்­பிய நாடு­கள் பரிந்­து­ரைத்­துள்­ளன," என்று ஆசி­யா­னுக்­குத் தற்­போது தலை­மை­தாங்­கும் புருணை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, உச்­ச­நிலை மாநாட்­டுக்கு அர­சி­யல் சார்­பற்ற பிர­தி­நி­தியை அழைக்க ஆசி­யான் எடுத்­துள்ள முடி­வுக்கு சிங்­கப்­பூர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.

"இது மிக­வும் சிர­மப்­பட்டு எடுக்­கப்­பட்ட முடிவு. ஆனால் ஆசி­யா­னின் நம்­ப­கத்­தன்­மையை நிலை­நாட்ட இந்த முடிவு அவ­சி­ய­மா­னது," என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­

கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

மியன்­மா­ரில் வன்­மு­றையை நிறுத்­த­வும் மனி­தா­பி­மான உத­வி­களை அனுப்­ப­வும் சம்­பந்­தப்­பட்ட அனைத்­துத் தரப்­பி­ன­ரும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வும் திட்­டம் ஒன்று முன்­வைக்கப்பட்டது.

ஆனால் அந்­தத் திட்­டத்தை மியன்­மார் ராணு­வம் இன்­னும் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை என்­றும் எவ்­வித முன்­னேற்­றத்­தை­யும் காண முடி­ய­வில்லை என்றும் அமைச்­சர் விவி­யன் பால­

கி­ருஷ்­ணன் கூறி­னார்.

ஆசி­யா­னின் சிறப்­புத் தூத­ரும் புரு­ணை­யின் இரண்­டாம் வெளி­

யு­றவு அமைச்­ச­ரு­மான திரு எரி­வான் யூசோஃப் இம்­மா­தம் மியன்­மா­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­மாட்­டார் என ஆசி­யான் நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் இணைந்து முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ஆசி­யான் உச்­ச­நிலை மாநாட்­டுக்­குத் தனது ராணு­வத் தலை­வர் அழைக்­கப்­ப­டா­த­தற்கு வெளி­நாட்­டுத் தலை­யீடு கார­ணம் என்று மியன்­மார் ராணு­வம் குறை­கூ­றி­யுள்­ளது.

இம்­மா­தம் 26ஆம் தேதி­யி­

லி­ருந்து 28ஆம் தேதி வரை நடை­பெற இருக்­கும் உச்­ச­நிலை மாநாட்­டி­லி­ருந்து மியன்­மார் ராணு­வத் தலை­வரை விலக்­கி­வைக்க அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஆகி­ய­வற்­றின் பிர­தி­நி­தி­கள் ஆசி­யான் நாடு­க­ளுக்கு நெருக்­கு­தல் தந்­த­தாக பிபிசி மியன்­மார் செய்தி நிறு­வ­னத்­தி­டம் மியன்­மார் ராணு­வத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் ஸோ மின் துன் தெரி­வித்­தார்.