பாலியில் நிலநடுக்கம்: மூவர் மரணம்

பாலியில் நிலநடுக்கம்: மூவர் மரணம்

1 mins read
650d27d5-8688-41d2-8eea-0d8c892ace40
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூவர் மாண்டனர். குறைந்தது ஏழு பேர் காயமுற்றதாக இந்தோனீசிய இயற்கைப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8ஆகப் பதிவானது. நிலபரப்புக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

அதில் இருவர் சிக்கி மாண்டதாக அதிகாரிகள் கூறினர். மரண எண்ணிக்கை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

"கிட்டத்தட்ட ஐந்து வினாடிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. மக்கள் பீதி அடைந்து தங்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.