தடுப்பூசி சாதனை முயற்சியில் நியூசிலாந்து

தடுப்பூசி சாதனை முயற்சியில் நியூசிலாந்து

1 mins read
4ea8524a-04aa-4a4d-b2de-f4e19f8d7f88
-

ஆக்­லாந்து: ஒரே நாளில் நாடெங்­கும் பல­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போட்டு சாதனை படைக்­கும் முயற்­சி­யில் நியூ­சி­லாந்து இறங்­கி­யது.

நேற்று நடை­பெற்ற இந்த மாபெ­ரும் முயற்­சிக்கு நியூ­சி­லாந்­தில் சுகா­தார அமைச்சு ஏற்­பாடு செய்­தது.

இதற்கு முன்பு ஒரே நாளில் 93,000 பேருக்­குத் தடுப்­பூசி போட்ட சாத­னையை முறி­ய­டிப்­பதே நியூ­சி­லாந்­தின் சுகா­தார அமைச்சு இலக்­காக இருந்­தது. கிட்­டத்­தட்ட 350,000 பேருக்­குத் தடுப்­பூசி போட நேர­மும் இட­மும் நேற்று ஒதுக்­கப்­பட்­டது. இது நியூ­சி­லாந்து மக்­கள்­தொ­கை­யில் ஏறத்­தாழ 8.3 விழுக்­கா­டா­கும்.

இதற்கிடையே, ஆக்லாந்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 பேர் நேற்று அந்நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏர் நியூசிலாந்து போயிங் 787 விமானத்தில் ஏற்றப்பட்டனர். பயணத்துக்காக அல்ல. மாறாக, வித்தியாசமான முறையில் அவர்களுக்கு விமானத்தில் தடுப்பூசி போடப்பட்டது.