விண்வெளியில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய ரஷ்யக் குழு

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய ரஷ்யக் குழு

1 mins read
35a784ac-cc06-4ac3-97f0-fe5626a20d51
கஸக்ஸ்தானின் ஸெஸ்கஸ்கன் பகுதிக்கு வெளியே நேற்று தரையிறங்கிய ரஷ்ய நடிகை யூலியா பெரசில்ட், விண்வெளி வீரர் ஒலெக் நொவிட்ஸ்கி, திரைப்பட இயக்குநர் கிலிம் ஷிபென்கோ. படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

ரஷ்ய நடிகை ஒருவரும் இயக்குநர் ஒருவரும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 12 நாள்கள் படப்பிடிப்பை முடித்தபின் இன்று புவிக்குத் திரும்பினர்.

யூலியா பெரசில்ட், கிலிம் ஷிபென்கோ என்ற அவ்விருவரும் சிங்கப்பூர் நேரப்படி இன்று நண்பகல் 12.36 மணிக்கு கஸக்ஸ்தானின் ஸ்டெப்பி புல்வெளியில் தரையிறங்கினர்.

கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த ஒலெக் நொவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் அவர்களுடன் புவியை வந்தடைந்தார்.

'தி சேலஞ்' என்ற இத்திரைப்படமே விண்வெளிச் சுற்றுப்பாதையில் எடுக்கப்படும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான கஸக்ஸ்தானின் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, மூத்த விண்வெளி வீரர் அன்டன் ஷ்கப்லெரோவுடன் இணைந்து அந்நடிகையும் இயக்குநரும் இம்மாதத் தொடக்கத்தில் படப்பிடிப்பிற்காக விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.