விண்வெளியில் 12 நாள்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய ரஷ்யக் குழு

ரஷ்ய நடிகை ஒரு­வ­ரும் இயக்­கு­நர் ஒரு­வ­ரும் அனைத்­து­லக விண்­வெளி நிலை­யத்­தில் 12 நாள்­கள் படப்­பி­டிப்பை முடித்­த­பின் நேற்று புவிக்­குத் திரும்­பி­னர்.

யூலியா பெர­சில்ட், கிலிம் ஷிபென்கோ என்ற அவ்­வி­ரு­வ­ரும் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று நண்­

ப­கல் 12.36 மணிக்கு கஸக்ஸ்­தா­னின் ஸ்டெப்பி புல்­வெ­ளி­யில் தரை­யி­றங்­கி­னர்.

கடந்த ஆறு மாதங்­க­ளாக விண்­வெளி நிலை­யத்­தில் தங்­கி­யி­ருந்த ஒலெக் நொவிட்ஸ்கி என்ற விண்­வெளி வீர­ரும் அவர்­க­ளு­டன் புவியை வந்­த­டைந்­தார்.

'தி சேலஞ்' என்ற இத்­தி­ரைப்

­ப­டமே விண்­வெ­ளிச் சுற்­றுப்­பா­தை­யில் எடுக்­கப்­படும் முதல் திரைப்

­ப­டம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

முன்­னாள் சோவி­யத் ஒன்­றிய நாடான கஸக்ஸ்­தா­னின் பைக்­கா­னூர் விண்­வெளி ஏவு­த­ளத்­தில் இருந்து, மூத்த விண்­வெளி வீரர் அன்­டன் ஷ்கப்­லெ­ரோ­வு­டன் இணைந்து அந்­ந­டி­கை­யும் இயக்­கு­ந­ரும் இம்­மா­தத் தொடக்­கத்­தில் படப்­பி­டிப்­பிற்­காக விண்­வெளி நிலை­யத்­திற்­குப் புறப்­பட்­டுச் சென்­ற­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!