நீண்டநாட்களாக மெல்பர்னில் நீடிக்கும் முடக்கநிலைக்கு முடிவு

மெல்­பர்ன்: கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது கூடி­யி­ருப்­பதை அடுத்து, ஆறா­வது முறை­யாக அறி­விக்­கப்­பட்ட முடக்­க­நி­லை­யில் இருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரம் இவ்­வா­ரம் வெளி­வர இருக்­கிறது.

மெல்­பர்­னைத் தலை­ந­க­ரா­கக் கொண்ட விக்­டோ­ரியா மாநி­லத்­தில் வரும் வியா­ழக்­கி­ழமை இரவு 11.59 மணி­யில் இருந்து கட்­டுப்­

பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­வுள்­ளன.

"வீட்­டை­விட்டு வெளியே செல்ல எந்­தக் கட்­டுப்­பா­டும் இராது," என்று விக்­டோ­ரியா முதல்­வர் டேனி­யல் ஆண்ட்­ரூஸ் சொன்­னார்.

இல்­லங்­கள் ஒரு­நா­ளைக்கு அதி­க­பட்­சம் பத்து விருந்­தி­னர்­களை வர­வேற்­க­லாம். உண­வ­கங்­களும் காப்­பிக்­க­டை­களும் சில கட்­டுப்­பா­டு­க­ளு­டன் திறக்­கப்

­படும்.

மாண­வர்­களும் இம்­மா­தம் 22ஆம் தேதி முதல் பள்­ளி­க­ளுக்குத் திரும்­பு­வர்.

இப்­போது அம்­மா­நில மக்­கள்­தொ­கை­யில் 70 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அவ்­வி­கி­தம் 80 விழுக்­காட்டை எட்­டி­ய­தும் மேலும் பல சில்­லறை விற்­பனை நிலை­யங்­கள் திறக்க அனும­திக்­கப்­படும்.

அத்­து­டன் திறந்­த­வெ­ளி­யில் முகக்­க­வ­சம் அணி­வது தொடர்­

பி­லும் தளர்­வு­கள் கொண்டு வரப்­படும்.

தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டு இருந்­தா­லும், தற்­போது திறந்­த­வெளி உட்­பட அனைத்து இடங்­

க­ளி­லும் முகக்­க­வ­சம் அணி­வது தொடர்ந்து கட்­டா­ய­மாகவே இருக்­கும்.

உல­கில் வேறெந்த நக­ரை­யும்­விட மெல்­பர்ன் நக­ரமே வெகு­கா­ல­மாக முடக்­க­நி­லை­யின்­கீழ் இருந்து வரு­கிறது.

ஐந்து மில்­லி­யன் மக்­கள்­

தொ­கை­யைக் கொண்ட அந்­ந­க­ரம் ஆறு முடக்­க­நிலை அறி­விப்­பு­க­ளால், மொத்­தம் 262 நாட்களாக முடக்­க­நி­லை­யில் இருந்து வரு­கிறது.

விக்­டோ­ரி­யா­வில் நேற்று புதி­தாக 1,838 கொரோனா பாதிப்­பு­களும் ஏழு உயி­ரி­ழப்­பு­களும் பதி­வா­கின.

இத­னி­டையே, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யின்­றிப் பய­ணம் செய்ய ஏது­வாக சிங்­கப்­பூ­ரு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் தெரி­வித்­து

உள்­ளது.

முன்­ன­தாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மக்­கள்­நெ­ருக்­கம் மிகுந்த சிட்னி நக­ரி­லும் மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு இம்­மா­தம் 11ஆம் தேதி முடக்­க­நிலை அகற்­றப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!