மெக்கா: சவூதி அரேபியாவின் புனித மெக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலில் சமூக இடைவெளி கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று அங்கு முழு எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் னுமதிக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தளர்த்துவது, பக்தர்களை முழு அளவில் அனுமதிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கை கூறுகிறது.
ஆனால் யாத்திரிகர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாக இருப்பதும் முகக்கவசம் அணிந்திருப்பதும் கட்டாயம்.
அத்துடன், பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள 'காபா'விற்கு அருகே யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்பு போடப்பட்டு
உள்ளது.

