லங்காவியில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

லங்காவியில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

1 mins read
5e3c4d4a-cf2e-40f1-8b4d-2d2e2d521921
-

லங்­காவி: பல மாதங்­க­ளுக்­குப் பிறகு லங்­கா­வி­யில் தொடக்­க­நிலை மாண­வர்­கள் நேற்று முதல் மீண்­டும் பள்­ளிக்­கூ­டத்­திற்­குச் செல்ல தொடங்­கி­யுள்­ள­னர்.

மலே­சி­யா­வில் கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை குறை­யத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து, நான்­காம் நிலை தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­களில் பள்­ளிக்­கூ­டங்­கள் படிப்­ப­டி­யாக திறக்­கப்­படும் என்று முன்பு அறி­விக்­கப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து, மலே­சி­யா­வின் லங்­கா­வி­யில் தொடக்­க­நிலை முதல், இரண்டாம், மூன்­றாம் வகுப்பு மாண­வர்­கள் நேற்று மீண்­டும் பள்­ளிக்­குத் திரும்­பி­

னர்.

அப்போது மாணவர்கள் உடல் வெப்­ப­நிலை பரி­சோ­த­னைக்கு உட்­

ப­டுத்­தப்­பட்­ட­னர்.

ஒரு­சில உயர்­நி­லை பள்­ளி­க­ளி­லும் மூன்றாம், நான்­காம் வகுப்பு மாண­வர்­கள் பள்­ளிக்­கு சென்­ற­னர்.

கிட்­டத்­தட்ட 29 தொடக்க, உயர்­நி­லைப் பள்­ளி­க­ளைச் சேர்ந்த 6,000 மாண­வர்­கள் நேற்று பள்­ளிக்­குச் சென்­ற­தாக நியூ ஸ்ட்­ரெய்­டஸ் டைம்ஸ் கூறு­கிறது.

ஐம்­பது விழுக்­காட்டுத் திற­னு­டன் பள்­ளி­கள் இயங்­கும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே, இரண்டு குழுக்­க­ளாகப் பிரிக்­கப்­பட்ட மாண­வர்­கள் வாராந்­திர அடிப்­ப­டை­யில் மாறி மாறி பள்­ளிக்­குச் செல்­வர்.

லங்­கா­வி­யைத் தொடர்ந்து லபு­வா­னில் இன்­றும் கோலா­லம்­பூர், சிலாங்­கூர், புத்­ர­ஜெயா, மலாக்கா ஆகிய பகு­தி­களில் வரும் நவம்­பர் மாதம் 1ஆம் தேதி­யும் பள்­ளி­கள் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.