'தடுப்பூசி போடாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சிரமமாக்குகிறார்கள்'

'தடுப்பூசி போடாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சிரமமாக்குகிறார்கள்'

1 mins read
48b276a8-da5d-4a94-92ae-39ed8af93be0
-

கோலா­லம்­பூர்: கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத­வர்­க­ளின் வாழ்க்­கையை சிர­ம­மாக்­கும் நோக்­கம் அர­சுக்கு இல்லை என்று கூறிய மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் தங்­க­ளது வாழ்க்­கையை தாங்களே சிர­ம­மாக்கிக்கொள்­கி­றார்­கள் என்றார்.

நேற்று முன்­தி­னம் மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தடுப்­பூசி போட்­டுக் கொள்ளா­த­வர்­

க­ளின் வாழ்க்கை சிர­ம­மா­கும் என்று கூறி­யி­ருந்­தார்.

அமைச்­ச­ரின் இந்த கூற்­றில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் எதிர்­கொள்­ளக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளைக் குறிப்­பி­டு­வ­தாகப் பிர­த­மர் இஸ்­மா­யில் கூறி­னார். இது­போன்ற பிரச்­சி­னை­கள் மலே­சி­யா­வில் மட்­டு­மல்ல, மற்ற நாடு­க­ளி­லும் உள்­ள­தாக அவர் சொன்­னார். முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் மட்­டுமே உம்ரா பய­ணத்­திற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வதை அப்போது அவர் சுட்­டி­னார்.