செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
be849d9d-212f-482f-a163-b81b17db5062
-

எல்லையைத் திறக்க தாய்லாந்து மக்களில் பலரும் எதிர்ப்பு

பேங்காக்: அனைத்துலக எல்லைகளைத் திறந்துவிட தாய்லாந்து தயாராகிவரும் நிலையில், அதனை அந்நாட்டு மக்களில் பலரும் எதிர்ப்பது அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

உள்நாட்டில் போதுமான அளவில் இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலையில், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் மூலமாக புதிதாக கொவிட்-19 தொற்று பரவலாம் என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து தாய்லாந்திற்கு வரலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா அண்மையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பில் சுவான் துசிர் ராஜபாத் பல்கலைக்கழகம், மேற்கொண்ட கருத்தாய்வில் பங்கு கொண்ட 1,392 பேரில் 59.86 விழுக்காட்டினர், பிரதமரின் அறிவிப்பை ஏற்கவில்லை.

போதைப்பொருள் கடத்தல்; மலேசிய நாட்டவர் கைது

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் துறைமுகத்தில் பெரியளவிலான ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டது.

கப்பலில் கொண்டு செல்லப்பட்ட டைல்ஸ் கற்கள் கண்டெய்னரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 450 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் மதிப்பு

104 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் என்றும் போலிசார் கூறினார். இதுதொடர்பில் மலேசிய நாட்டவர் ஒருவர்

கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

தைவான் நீரிணையைக் கடந்து சென்ற அமெரிக்கப் போர்க்கப்பல்

தைப்பே: அமெரிக்க, கனடா போர்க்கப்பல் ஒன்று சென்ற வாரம் தைவான் நீரிணையைக் கடந்து சென்றதாக அமெரிக்க ராணுவம் நேற்று கூறியது. தைவானுக்கும் அதற்கு உரிமை கோரும் சீனாவிற்கும் இடையில் உச்சமடைந்துள்ள பதற்றம் உலக நாடுகளிடையே கவலை எழுப்பியுள்ள நிலையில் அமெரிக்கா இதனைக் கூறியுள்ளது.

வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்காவைச் சாடும் சீனாவின் கோபத்திற்கு மத்தியில், அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளின் கடற்படை கப்பல்கள் மாதந்தோறும் தைவான் நீரிணையைக் கடந்து செல்கின்றன.