தைவானை உலுக்கிய நிலநடுக்கம்

தைவானை உலுக்கிய நிலநடுக்கம்

1 mins read
6ae6cb97-568f-4715-a784-ec34cda045af
தென்சீனக் கடலில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியில் தைவான் அமைந்துள்ளது. படம்: அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் -

தைவானின் கிழக்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு அருகே இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவில் 5.2 என அது பதிவானது.

இதில் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவுமில்லை.

நிலநடுக்கத்தால் தலைநகர் தைப்பேவில் கட்டடங்கள் சிறிது நேரம் குலுங்கின. 30.2 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வடக்கு, கிழக்கு தைவானில் நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக தைவானிய வானிலை ஆய்வு மையம் கூறியது.

தென்சீனக் கடலில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியில் தைவான் அமைந்துள்ளது.

2016ல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1999ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்