தொழிலதிபர்களுக்கான பயண ஏற்பாடு: மலேசியா, இந்தோனீசியா இணக்கம்

தொழிலதிபர்களுக்கான பயண ஏற்பாடு: மலேசியா, இந்தோனீசியா இணக்கம்

1 mins read
8ea7bbb2-f587-4f04-80de-75b6ea736ac0
மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா (இடது), இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி. படம்: இபிஏ -
Google News Preferred Icon

இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே தொழிலதிபர்கள் வர்த்தகப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது.

"இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் பயணங்களை மேற்கொள்வோருக்கு சிறப்புப் பயண ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் இணக்கம் தெரிவித்துள்ளோம். இந்தோனீசியாவுக்கு மலேசியப் பிரதமர் வருகை அளிக்கும்போது இதுகுறித்து பேசப்படும்," என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி கூறினார்.

மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா, "நாங்கள் படிப்படியாக எல்லைகளைத் திறப்போம். இயல்புநிலையை நோக்கி நகர்வோம்," என்று சொன்னார்.