சிட்னியில் தளர்வு; மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்; கடற்கரையில் மகிழ்ச்சி ெவள்ளம்

சிட்னியில் தளர்வு; மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்; கடற்கரையில் மகிழ்ச்சி ெவள்ளம்

1 mins read
95084d99-4a40-4134-937d-2300490818c8
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பர­ப­ரப்­பான நக­ர­மான சிட்­னி­யில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்தப்பட்டு வரு­வ­தால் நேற்று ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­கள் பள்­ளி­க­ளுக்­குத் திரும்­பி­னர்.

ஏறக்­கு­றைய நான்கு மாதங்­ களாக அவர்­கள் வீட்­டி­லேயே பள்­ளிப் பாடங்­களைப் பயின்று வந்­த­னர். தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை கூடி­யுள்­ள­தால் சிட்னி நக­ரம் முடக்­கத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்டு வரு கின்றன.

சிட்­னியைத் தலை­ந­க­ர­மா­கக் கொண்ட நியூ சவுத் வேல்சில் அலு­வ­ல­கத்­தில் முகக்­க­வ­சம் அணிவது இனி கட்­டா­ய­மில்லை. வீட்­டி­லும் வெளி­யி­டங்­க­ளி­லும் பெரிய குழுக்­க­ளாக ஒன்­று­கூட முடி­யும். கடந்த வார இறு­தி­யில் 16 வய­துக்கு மேற்­பட்ட 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடும் இலக்கு எட்­டப்­பட்­டது.

இந்­த நிை­ல­யில் தொற்­றுக் கிருமியு­டன் வாழும் உத்­திக்கு அரசு மாறி­யுள்­ள­தால் படிப்­ப­டி­யாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

இத­னால் தொற்று மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அதி­கா­ரி­கள் எச்சரித்துள்ளனர்.

"இதோடு முடிந்­து­வி­ட­வில்லை. சுகா­தார விதி­மு­றை­களை மக்­கள் தொடர்ந்து கடைப்­பி­டிக்க வேண்­டும், இது­வொரு நீண்ட பய­ணம்" என்று முதல்­வர் டொமி­னிக் பெரோ­டெட் குறிப்­பிட்­டார். கடை­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், மது­பா­னக் கூடங்­கள் போன்ற இடங்­க­ளுக்கு தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­கள் செல்ல முடி­யும். இரவுக் கேளிக்கை விடு­தி­கள் மீண்­டும் திறக்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளன.

திரு­மண விருந்­தில் விருந்­தி­னர்­க­ளுக்­கான உச்ச வரம்பு விலக்­கப்­பட்­டுள்­ளது. கடற்கரையில் கூடிய ஏராளமானோர் இதமான வெயிலை அனுபவித்தபடி நீராடி, நீர்ச்சறுக்கி, விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

ஆனால் எல்லா நேரங்­க­ளி­லும் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.