தடுப்பூசி அடிப்படையிலான புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட பிறகு 17,000 பேர் முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்

தடுப்பூசி அடிப்படையிலான புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட பிறகு 17,000 பேர் முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்

1 mins read
e87f0a0e-9fdd-40da-ab0d-3eb73cacb029
-

சிங்கப்பூரில் தடுப்பூசி அடிப்படையிலான புதிய நடவடிக்கைகள் (vaccination-differentiated measures) அறிமுகம் கண்ட ஒரு வாரத்தில் கூடுதலானோர் 'பூஸ்டர்' மற்றும் முதல் கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அக்டோபர் 9 முதல் 15 வரை ஏறத்தாழ 17,000 பேர் தங்களது முதல் தடுப்பூசியையும் 162,000 பேர் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒப்புநோக்க, அக்டோபர் 2 முதல் 8 வரை ஏறக்குறைய 11,000 முதல் தடுப்பூசியையும் 135,000 பேர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவருந்தவும் கடைத்தொகுதிகள் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும் முடியாது என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு அக்டோபர் 9ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானபோது அன்றாடத் தொற்று 3,000க்குமேல் பதிவாகி வந்தது.