ஹாங்காங் தலைமை நிர்வாகிக்கு முழங்கையில் எலும்பு முறிவு

ஹாங்காங் தலைமை நிர்வாகிக்கு முழங்கையில் எலும்பு முறிவு

1 mins read
a631b5ba-ad27-4ab8-9b47-0f7a9e5e2c75
ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம். படம்: புளூம்பெர்க் -
Google News Preferred Icon

ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கீழே விழுந்ததில் வலது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 19) அவர் வீடு திரும்பினார்.

குவீன் மேரி மருத்துவமனையிலிருந்து வெளியேறி காரில் அவர் ஏறுவதை ஊடகங்கள் படமெடுத்தன. செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் அவர் பதிலளிக்கவில்லை.

"அவராகவே மருத்துவமனைக்குச் சென்றார். அவரது வலது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது," என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

குறிப்புச் சொற்கள்