மியன்மாரில் அரசியல் கைதிகள் விடுவிப்பு

யங்­கூன்: மியன்­மார் ராணுவ அர­சாங்­கம் இன்­சீன் சிறைச்­சா­லை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான அர­சி­யல் கைதி­களை நேற்று விடு­வித்­தது.

மியன்­மா­ரில் நடை­பெ­றும் வன்­முறை சம்­ப­வங்­களை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்கு ஆசி­யான் அழுத்­தம் கொடுக்க வேண்­டும் என்று அனைத்­து­லக அள­வில் நெருக்­கடி கொடுக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், எதிர்­வ­ரும் ஆசி­யான் உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­கொள்ள அந்­நாட்­டின் ராணு­வத் தலை­வ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக அர­சி­யல் சார்­பற்ற பிர­தி­நிதி ஒரு­வர் கலந்­து­கொள்­வார் என்று கூறப்­பட்­டது.

இதை­ய­டுத்து, மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் 5,600க்கும் மேற்­பட்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மன்­னிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­படப்போவ­தாக திங்­கட்­கி­ழ­மை­யன்று மியன்­மார் ராணு­வத் தலை­வர் அறி­வித்­

தார்.

இத­னைத் தொடர்ந்து, மியன்­மார் முன்­னாள் தலை­வர் திரு­வாட்டி ஆங் சான் சூச்­சி­யின் கட்சி செய்தித் தொடர்­பா­ள­ரும் பிர­பல நகைச்­சுவை நடி­க­ரு­மான சர்­க­னர் உட்­பட 1,000 பேர் நேற்று விடு­விக்­கப்­பட்­ட­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

ஆனால் சரிந்­து­விட்ட நற்­பெ­யரை மீண்­டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான ராணுவ ஆட்­சி­யின் சூழ்ச்சி இது என்று ஆர்­வ­லர்­கள் சிலர் கூறு­கின்­ற­னர்.

ஐநா சிறப்பு அதி­காரி டாம் ஆண்ட்­ரூஸ், மியன்­மா­ரின் இந்­ந­ட­வ­டிக்­கையை வர­வேற்­றி­ருந்­தா­லும், இவர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­தற்கு மியன்­மார் ராணுவ அர­சாங்­கத்­தின் மன­மாற்­றம் கார­ண­மல்ல, அவர்­கள் மீதான அழுத்­தம் ஒன்றே கார­ணம் என்று டுவிட்­ட­ரில் பதி­விட்டு இருந்­தார்.

கிட்­டத்­தட்ட எட்டு மாதங்­க­ளாக ராணுவ ஆட்­சி­யின் கீழ் இருக்­கும் மியன்­மா­ரின் மக்­கள்­தொ­கை­யில், கிட்­டத்­தட்டப் பாதிப் பேர் வறு­மைக்­கோட்­டிற்­குகீழ் வாழ்­வ­தா­க­வும் அங்கு 20 ஆண்­டு­கள் காணாத வறுமை நில­வு­வ­தா­க­வும் ஐநா கூறி­யுள்­ளது.

மனி­தா­பி­மான உதவி தேவைப்

­ப­டு­வோர் எண்­ணிக்கை எட்டு மாதங்­களில் ஒரு மில்­லி­ய­னில் இருந்து மூன்று மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கிருமி பர­வல், ராணுவப் புரட்சி, வன்­முறை போன்ற தொடர் நெருக்­க­டி­களே மியன்­

மா­ர் மக்களின் இந்த நிலைக்­குக் கார­ணம் என்­கிறது ஐநா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!