மோண்டரீல்: கனடாவில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை ஐந்து முதல் 11 வயதுடைய பிள்ளை
களுக்குப் பயன்படுத்துவதற்கு கனடா சுகாதார அமைப்பிடம் அனுமதி கோரியுள்ளதாக மருந்து நிறுவனங்களும் கனடா அரசாங்கமும் கூறியுள்ளது.
கனடாவில் இந்த வயதுடைய பிள்ளைகளுக்குத் தடுப்பூசிக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப் படுவது இதுவே முதல்முறை என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு
உள்ளது.
கிட்டத்தட்ட 2,268 பிள்ளை
களிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த அனுமதி கோரப்பட்டுள்ளதாக ஃபைசர் நிறுவனம் சொன்னது.
பிள்ளைகளுக்கு 10 மைக்ரோகிராம் அளவில் தடுப்பூசி போடப்பட்டதாகவும் இது வழக்கமாக போடப்படும் தடுப்பூசியின் அளவைவிட மும்மடங்கு குறைவானது என்றும் கூறப்படுகிறது.
12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கனடாவில் ஏற்கெனவே ஃபைசர் தடுப்பூசி பயன்
படுத்த அனுமதி வழங்கப்பட்டு
உள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனை முடிவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று கனடா சுகாதார அமைப்பு கூறியது.
அமெரிக்காவிலும் 5-12 வயதுடைய பிள்ளைகளுக்குத் தங்களது தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி கோரி இம்மாத தொடக்கத்தில் ஃபைசர் நிறுவனம் விண்ணப்
பித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உலக சுகாதார நிறுவனமோ, பணக்கார நாடுகளில் பிள்ளைகள், பதின்ம வயதினருக்குத் தடுப்பூசி போடுவதைக் காட்டிலும் ஏழை நாடுகளில் வசிக்கும் பெரியோர்களுக்குத் தடுப்பூசி போடுவதே முக்கியமானதாகும் என்று கூறுகிறது.
மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறைவாக இருக்கும் நாடுகளில் கிருமித்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

