லண்டன்: கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன். இதனை அரசாங்கம் அணுக்கமாக கவனித்து வருவதாக சொன்ன அவர், வரும் குளிர்காலம் கடினமானதாக இருக்கும் என்றார்.
கடந்த ஆறு வாரங்களாக, அங்கு ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 800 பேர் பலியாகின்றனர்.

