சீன நகரங்கள் முடங்கின

பெய்­ஜிங்: சீனா­வில் நேற்று ஒன்­பது உள்­ளூர் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தைத் தொடர்ந்து, இரண்டு நக­ரங்­கள் முடக்­கப்­பட்­டன.

சென்ற மாத இறு­திக்­குப் பிறகு பதி­வான ஆக அதிக உள்­ளூர் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் இவை.

இவற்­றில் ஐந்து, ஷான்சி மாநி­லத்­தின் வட­மேற்கு நக­ர­மான சியா­னில் பதி­வா­னவை. மேலும் இரண்டு சம்­ப­வங்­கள், மங்­கோ­லிய எல்­லை­யை­யொட்­டிய நக­ரங்­க­ளி­லும் பதி­வா­ன­தாக அந்­நாட்­டின் சுகா­தார ஆணை­யம் கூறு­கிறது.

இதை­ய­டுத்து, விடுக்­கப்­பட்ட முடக்­க­நிலை உத்­த­ர­வால், மங்­கோ­லிய எல்­லையை ஒட்­டி­யுள்ள உள் மங்­கோ­லி­யா­வில் 76,000 பேர் வீட்­டி­லேயே முடங்­கி­யுள்­ள­னர். திரை­ய­ரங்­கு­கள், உடற்­ப­யிற்சி கூடங்­கள் உள்­ளிட்ட உட்­புற பொழு­து­போக்கு இடங்­களும் மூடப்­பட்­டுள்­ளன. சமய நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது, பள்­ளிக்­கூ­டங்­களும் மூடப்­பட்­டன.

இந்­ந­க­ரங்­களில் கொவிட்-19 பரி­சோ­தனை நட­வ­டிக்கை முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, சீனா­வின் பொரு­ளா­தா­ரம் கடு­மை­யாக சரி­வ­டைந்­துள்­ளது.

சீனா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 3ஆம் காலாண்­டில் வெறும் 4.9 விழுக்­காடு மட்­டுமே அதி­க­ரித்­துள்­ளது.

இது இரண்­டாம் காலாண்­டின் 7.9 விழுக்­காட்­டை­விட 5 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், தற்­போது அது 3 விழுக்­காடு குறைந்­துள்­ளது.

கொவிட்-19 தொற்­றில் இருந்து மீண்ட சீனா, நிலக்­கரி பற்­றாக்­கு­றை­யால் பெரும் சரிவை எதிர்­கொண்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!