வெலிங்டன்: நியூசிலாந்தில் நேற்று ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
கடுமையான முடக்கநிலை, எல்லை கட்டுப்பாடுகள் ஆகியவை நடப்பில் உள்ளபோதும், வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கிருமித் தொற்று காரணமாக அந்நாட்டின் ஆக்லாந்து நகரத்திலும் அண்டை நகரங்களிலும் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இதற்கிடையே, ஆக்லாந்தில் மேலும் இரண்டு வாரத்திற்கு முடக்கநிலை நீட்டிக்கப்படுவதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
நேற்று அங்கு பதிவான 94 தொற்று சம்பவங்களில், 87 ஆக்லாந்தில் பதிவானவை.
கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை மீறுவோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுமே கிருமிப் பரவலுக்குக் காரணம் என்று நியூசிலாந்து அதிகாரிகள் சாடுகின்ற
னர்.
கிருமிப் பரவல் கட்டுப்பாடு
களைப் பின்பற்றவேண்டும் என்றும் தகுதிபெறும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கு இதுவரை 67 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரித்து, கொவிட்-19 கிருமித்தொற்றை நிரந்தர நோயாகக் கையாள அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அங்கு இதுவரை மொத்தம் 2,099 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 38 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 பேர் மாண்டுவிட்டனர்.

