நியூசிலாந்தில் ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள்

நியூசிலாந்தில் ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள்

1 mins read
287d90ca-c719-4dfc-a610-95aed6cd40a3
-

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் நேற்று ஆக அதிக கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

கடு­மை­யான முடக்­க­நிலை, எல்லை கட்­டுப்­பா­டு­கள் ஆகி­யவை நடப்­பில் உள்­ள­போ­தும், வேக­மா­கப் பர­வக்­கூ­டிய டெல்டா வகை கிருமித் தொற்று கார­ண­மாக அந்­நாட்டின் ஆக்­லாந்து நக­ரத்­தி­லும் அண்டை நக­ரங்களிலும் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை பெருகி வரு­கிறது.

இதற்கிடையே, ஆக்­லாந்­தில் மேலும் இரண்டு வாரத்­திற்கு முடக்­க­நிலை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக திங்­கட்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டது.

நேற்று அங்கு பதி­வான 94 தொற்று சம்­ப­வங்­களில், 87 ஆக்­லாந்­தில் பதி­வா­னவை.

கிருமிப் பர­வல் கட்­டுப்­பா­டு­களை மீறு­வோ­ரும் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளாத­வர்­க­ளுமே கிருமிப் பர­வ­லுக்­குக் கார­ணம் என்று நியூ­சி­லாந்து அதி­கா­ரி­கள் சாடு­கின்­ற­

னர்.

கிருமிப் பரவல் கட்­டுப்­பா­டு­

க­ளைப் பின்­பற்றவேண்­டும் என்றும் தகுதிபெறும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் நியூ­சி­லாந்து பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டென் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அங்கு இது­வரை 67 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்­கையை அதி­க­ரித்து, கொவிட்-19 கிரு­மித்­தொற்றை நிரந்­தர நோயாகக் கையாள­ அந்­நாட்டு அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது.

அங்கு இதுவரை மொத்தம் 2,099 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 38 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 பேர் மாண்டுவிட்டனர்.