பங்ளாதே‌‌‌ஷில் வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது

1 mins read
92e16b0f-5e18-417d-8ba3-d731c545be44
-

டாக்கா: பங்­ளா­தேஷ் நாட்­டில் கடந்த சில நாள்­க­ளாக சிறு­பான்மை இந்­துக்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­கள் தொடர்­பில் இது­வரை 450 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

வன்­மு­றைத் தாக்­கு­தல்­களில் குறைந்­தது அறு­வர் கொல்­லப்­பட்­ட­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் கூறின. இந்­துக் கோவில்­கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன; வீடு­கள் சூறை­யா­டப்­பட்­டன, தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன.

துர்கா பூசை­யின்­போது இடம்­பெற்ற இந்த வன்­முறை நிகழ்­வு­கள் தொடர்­பில் 71 வழக்­கு­கள் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன.

முன்னதாக, இஸ்லாம் சமயத்தை அவமதித்துவிட்டதாக சமூக ஊடகத்தில் செய்தி பரவியதைத் தொடர்ந்து அந்நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

பங்­ளா­தேஷ் மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட பத்து விழுக்­காட்­டி­னர் இந்­துக்­கள்.

பிர­த­மர் ஷேக் ஹசீ­னா­வின் அவாமி லீக் கட்சி 2009ல் ஆட்­சி­யைப் பிடித்த பிறகு, அங்கு நிகழ்ந்த ஆகப் பெரிய சமய வன்­முறை இது.

இந்­நி­லை­யில், "சமூக ஊட­கங்­களில் பரப்­பப்­படும் வெறுப்­பு­ணர்­வால் பங்­ளா­தேஷ் இந்­துக்­கள்­மீது தொடுக்­கப்­பட்ட அண்­மைய தாக்கு

­தல்­கள், அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரா­னது. அது நிறுத்­தப்­பட வேண்­டும்," என்று பங்­ளா­தே­ஷிற்­கான ஐநா ஒருங்­கி­ணைப்­பா­ளர் மியா செப்போ வலி­

யு­றுத்­தி­யுள்­ளார்.

இத­னி­டையே, சம­யத்தை முன்­வைத்து வன்­மு­றை­யைத் தூண்­டி­விட்­டோர்­மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி பிர­த­மர் ஷேக் ஹசினா, உள்­துறை அமைச்­ச­ரி­டம் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

அத்­து­டன், உண்­மையை ஆரா­யா­மல் சமூக ஊட­கங்­களில் வரும் எத­னை­யும் நம்பி

­விட வேண்­டாம் என்று பொது­மக்­க­ளை­யும் அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.