ஆசிய பொருளியல் குறையும்

அனைத்துலக பண நிதியத்தின் இவ்வாண்டுக்கான முன்னுரைப்பு

தோக்­கியோ: ஆசி­யா­வின் நடப்­பாண்­டுக்­கான பொரு­ளி­யல் வளர்ச்சி குறை­வாக இருக்­கும் என்று முன்­னு­ரைத்­துள்­ளது அனைத்­து­லக பண நிதி­யம்.

அத்­து­டன், கொவிட்-19 நோய் தொற்­றின் புதிய அலை, பொருள் விநி­யோக இடை­யூ­று­கள் மற்­றும் பண­வீக்க அழுத்­தம் ஆகி­யவை மேலும் நிலை­மையை மோச­மாக்­கக் கூடும் என்­றும் அது எச்­ச­ரித்­துள்­ளது.

சீனா­வின் பொரு­ளி­யல் இவ்­வாண்டு 8 விழுக்­கா­டும் 2022ல் 5.6 விழுக்­கா­டும் வளர்ச்சி காணும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஆனால் மீண்­டும் மீண்­டும் ஏற்­படும் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக, மீட்சி நிலைத்­தன்மை யற்­ற­தாக இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்­து­லக பண நிதி­யத்­தின் வட்­டார அறிக்­கை­யில், ஆசி­யா­வின் இவ்­வாண்­டுக்­கான பொரு­ளி­யல் வளர்ச்­சியை 6.5 விழுக்­கா­டாக குறைத்­தது. இது சென்ற ஏப்­ரல் மாதம் முன்­னு­ரைக்­கப்­பட்­ட­தை­விட 1.1 விழுக்­காடு குறை­வா­கும்.

டெல்டா வகை கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக தொழிற்­சாலை உற்­பத்தி, நுகர்­வோர் விகி­தம் குறைந்­த­தால், பொரு­ளி­யல் வளர்ச்சி குறைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் 2022ல் ஆசி­யா­வின் பொரு­ளி­யல் வளர்ச்சி 5.7 விழுக்­கா­டாக இருக்­கும் என்று கூறி­யுள்­ளது. இது ஏப்­ரல் மாதத்­தில் கூறப்­பட்ட 5.3 விழுக்­காடு வளர்ச்சி என்­ப­தை­விட சற்று அதி­க­மா­கும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தன் கார­ண­மாக பொரு­ளி­யல் வளர்ச்­சி­யும் அதி­க­ரிக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வின் பொரு­ளி­யல் இவ்­வாண்டு 9.5 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதே நேரத்­தில் மேம்­பட்ட பொரு­ளி­ய­லைக் கொண்ட ஆஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா, நியூ­

சி­லாந்து, தைவான் போன்ற நாடு­கள் உயர்தொழில்­நுட்­பத்­தால் பய­ன­டை­கின்­றன என்று நிதி­யம் தெரி­வித்­துள்­ளது.

ஆனால் இந்­தோனீ­சியா, மலே­சியா, பிலிப்­பீன்ஸ், சிங்­கப்­பூர், தாய்­லாந்து ஆகிய நாடுகள் கிருமிப் பரவல் காரணமாக ‘கடு­மை­யான சவால்­களை’ எதிர்­கொள்வதாக நிதியம் சொன்னது.

எதிர்வரும் மாதங்களில் கிருமித் தொற்றின் புதிய அலைகள் பெரும் கவலையாக உள்ளதாகவும் அது சொன்னது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!