மனிதருக்குப் பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை

மனிதருக்குப் பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை

1 mins read
25a4f6a5-ee63-436e-ab19-4f7a0d11a067
-

நியூ­யார்க்: மருத்­துவ உல­கின் மைல்­கல்­லாக, பன்­றி­யின் சிறு­

நீ­ரகம், மனி­த­ருக்­குப் பொருத்­தப்­பட்டு வெற்­றி­க­ர­மாக மூன்று நாட்­

க­ளுக்­குச் பரிசோதிக்­கப்­பட்டது.

அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் உள்ள என்.ஒய்.யு லங்­ஓன் உறுப்­பு­மாற்று சிகிச்சை மையத்­தைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் இந்தச் சாத­னை­யைப் படைத்­துள்­ள­னர்.

மர­பணு மாற்­றம் செய்­யப்­பட்ட பன்­றி­யி­டம் இருந்து எடுக்­கப்­பட்ட சிறு­நீ­ர­கத்தை மூளைச்­சா­வ­டைந்த ஒரு­வ­ருக்கு பொருத்­தி­ய­தில், அந்த சிறு­நீ­ர­கம் நன்­றாக இயங்­கி­ய­து­டன், சிறு­நீ­ரை­யும் கிரி­யேட்­டி­னை­யும் பிரித்து வெளி­யேற்­றி­யதை மருத்­து­வர்­கள் கண்­ட­றிந்­த­னர்.

மனி­த­னின் ரத்­த­நா­ளங்­க­ளு­டன் பன்­றி­யின் சிறு­நீ­ர­கத்­தைப் பொருத்­திய மருத்­து­வர்­கள், அதனை உட­லுக்­குள் பொருத்­தா­மல், மூன்று நாட்­க­ளுக்கு உட­லுக்கு வெளியே வைத்து பரி­சோ­தித்­த­னர்.

இரு­த­யம், கல்­லீ­ரல், நுரை­யீ­ரல், சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் பெரு­கி­வ­ரும் நிலை­யில், பன்றி உள்­ளிட்ட விலங்­கு­களில் இருந்து எடுக்­கப்­பட்ட உடல் உறுப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்த கடந்த சில ஆண்­டு­க­ளாக முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன.

அமெ­ரிக்­கா­வில் மட்­டும் கிட்­டத்­தட்ட 107,000 பேர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்­சைக்­காக காத்­தி­ருப்­ப­தாகவும் அவர்­களில் 90,000 பேர் மாற்று சிறு­நீ­ர­கத்­திற்­காகக் காத்­து கொண்­டி­ருப்பதாகவும் உட­லு­றுப்பு பகிர்வு அமைப்பு ஒன்று கூறி­யது.