சிட்னி-விக்டோரியா பயணம்: தனிமைப்படுத்தல் கிடையாது

சிட்னி-விக்டோரியா பயணம்: தனிமைப்படுத்தல் கிடையாது

1 mins read
4a7de6b0-ae04-44f9-83ee-bb415f020f51
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில மக்­கள் விக்­டோ­ரி­யா­விற்­குச் செல்­வ­தற்­கான பய­ணக் கட்­டுப்

­பா­டு­கள் நேற்று முதல் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

சிட்னி உள்­ளிட்ட நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் நக­ரங்­களில் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்­கை­யும் குறை­யத் தொடங்­கி­யுள்­ள­தால், அம்­மா­நில மக்­கள் இனி தனி­மைப்­ப­டுத்­தல் இல்­லா­மல் விக்­டோ­ரி­யா­விற்­குப் பய­ணம் செய்­ய­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரண்டு மாநி­லங்­க­ளுக்­கும் இடை­யில், கடந்த மூன்று மாத கால­மாக நீடித்த இந்த பய­ணக் கட்­டுப்­பாடு தற்­போது தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால் மெல்­பர்­னில் இருந்து சிட்னி செல்ல விரும்­பு­வோர், கண்­டிப்­பாக இரண்டு வார தனி­மைப்

படுத்­த­லுக்கு உட்­பட வேண்­டும்.

விக்­டோ­ரி­யா­வில் நேற்று 1,841 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். இது முந்­தைய நாள் எண்­ணிக்­கை­யான 1,749ஐவிட அதி­கம்.

உல­க­ள­வில் நீண்ட நாள்­க­ளாக, அதா­வது 262 நாள்­க­ளாக, முடக்­க­நி­லை­யில் இருந்த விக்­டோ­ரி­யா­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் 70 விழுக்­காட்டை எட்­டி­ய­தால், இன்று இரவு முதல் அங்கு முடக்­க­நிலை தளர்த்­தப்­ப­ட­வுள்­ள­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த விகி­தம் 80, 90 விழுக்­காட்டை எட்­டும்­போது மேலும் அதிக தளர்­வு­கள் கொண்டு வரப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

சிட்­னி­யி­லும் கான்­பெ­ரா­வி­லும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால், அம்­மா­நி­லங்­களில் சென்ற வாரம் முடக்­க­நிலை தளர்த்­தப்­பட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இது­வரை 149,000 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். 1,577 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

ஆனால் அனைத்­து­லக அள­வில் பார்க்­கும்­போது, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தொற்­றுக்கு ஆளா­னோர் எண்­ணிக்கை மிக­வும் குறை­வா­கும்.