அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
90862c78-5dde-4ba0-acc0-90e9cce7a5a7
-

யங்கூன்: மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ராணுவப் படையினர் தேடி அழித்து வருவதால், அச்சமடைந்த மியன்மார் மக்கள் இந்தியா, தாய்லாந்திற்குத் தப்பியோடுகின்றனர்.

மக்கள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து ராணுவப் படை நடத்திய தாக்குதலின்போது, குடியிருப்புப் பகுதிகளுக்குள் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. உணவு விநியோகமும் தடுக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் தப்பியோடும் பொதுமக்களும் சுடப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ரோஹிங்கியாக்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக நீடிக்கும் அடக்குமுறையால், அவர்கள் அண்டைநாடு களுக்கு அடைக்கலம் புகுந்தனர். இந்நிலையில் ராணுவப் புரட்சியின் காரணமாக அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று உதவிக்குழுக்கள் கூறுகின்றன.

தாய்லாந்தின் எல்லையை ஒட்டியுள்ளது மியன்மாரின் சின் மாநிலம். இங்கு கிட்டத்தட்ட 12,000 பேர் வசித்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில் கிட்டத்தட்ட அந்நகரம் முழுவதுமே காலியாகி விட்டது.

அப்பகுதியில் ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.