ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர்களை உறுதிசெய்ய அமெரிக்க நாடாளுமன்ற மேலவை ஆய்வு

வாஷிங்­டன்: ஆசிய நாடு­களில் சீனா தலை­யெ­டுத்து வரு­வ­தைக் கவ­னத்­தில் கொண்டு, அதைச் சமா­ளிக்­கும் வகை­யில் முக்­கி­ய­மான ஆசிய நாடு­களில் அமெ­ரிக்­கத் தூதர்­கள் பணி­யில் அமர்த்­தப்­பட வேண்­டும் என்ற நோக்­கில் அதி­பர் பைடன், சில­ரைத் தேர்­வு­செய்­தி­ருந்­தார். அது நாடா­ளு­மன்ற ஒப்­பு­த­லுக்­காக அனுப்­பப்­பட்­டது. அந்த முக்­கி­ய­மான நாடு­கள் சிங்­கப்­பூர், சீனா மற்­றும் ஜப்­பான் ஆகி­யவை ஆகும்.

நீண்­ட­கா­லக் காத்­தி­ருப்­புக்­குப் பின் அதி­ப­ரின் முன்­மொ­ழிவை நாடா­ளு­மன்ற மேல­வைக் குழு, ஆய்­வு­செய்­யத் தொடங்­கி­யுள்­ளது. அதி­ப­ரின் முன்­மொ­ழிவை உறு­தி­செய்­யும் வகை­யில் முன்­மொ­ழி­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் நேற்று முன்­தி­னம் அக்­குழு விசா­ரணை மேற்­கொண்­டது.

"இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் தன்னை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள சிங்­கப்­பூ­ரு­ட­னான பங்­கா­ளித்­து­வம் தவிர்க்­க­மு­டி­யா­தது," என்று அதி­பர் பைட­னால் சிங்­கப்­பூர் தூதர் பணிக்கு முன்­மொ­ழி­யப்­பட்ட தொழில்­நுட்­பத் துறை தொழில்­முனை­வ­ரான ஜோனா­தன் கப்­லன் கூறினார்.

"நான் சிங்­கப்­பூ­ருக்­கான அமெ­ரிக்­கத் தூத­ரா­வது உறு­தி­செய்­யப்­பட்­டால், "இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான வர்த்­தக உறவை வலுப்­ப­டுத்­து­வ­தோடு இரு நாடு­களும் பய­ன­டை­யும் வகை­யி­லான செயல்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பேன். அத்­து­டன் உல­கில் பரு­வ­நிலை மாற்­றங்­க­ளால் பாதிக்­கப்­படும் பொரு­ளி­யலை, காலத்­திற்­கேற்ப நெருக்­க­டிச் சூழ­லைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரு­டன் நெருக்­க­மாக இணைந்து பணி­யாற்­றத் திட்­டம் கொண்­டுள்­ள­தாக திரு கப்­லான், அமெ­ரிக்க மேல­வை­யின் வெளி­யு­ற­வுக் குழு­வி­டம் தெரி­வித்­தார்.

"மேலும், நாடு­க­ளு­ட­னான பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பை வலுப்­படுத்­து­வ­தற்கு இதை நல்ல வாய்ப்­பா­கப் பயன்படுத்திக்கொள்­வேன்.

"மேலும் இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் அமை­தி­யைக் கட்­டிக்­காக்­கும் வகை­யில் அனைத்­து­லக விதி­க­ளைத் தற்­காப்­பேன்," என்­றும் திரு கப்­லான் மேல­வைக் குழு­வி­டம் தெரி­வித்­தார்.

சீனா­வுக்­கான தூத­ராக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள நிக்­கோ­லஸ் பர்ன்ஸ், ஜப்­பா­னுக்­கான தூத­ராக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சிகாகோ நக­ரின் முன்­னாள் மேயர் ராஹ்ம் இமா­னு­வல் ஆகி­யோ­ரி­ட­மும் மேல­வைக் குழு, விசா­ரணை மேற்­கொண்­டது.

சீனா­வு­ட­னான போட்­டித்­தன்மை அதி­க­ரித்து வரும் நிலை­யில், அமெ­ரிக்­கா­வின் வெளி­யு­ற­வுக் கொள்கை முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக இருந்­த­போ­தி­லும், அதி­பர் பைடன் ஆட்­சிக்கு வந்து கிட்­டத்­தட்ட ஓராண்டு கால­மாக அந்­நாட்­டுக்­கான அமெ­ரிக்­கத் தூதர் பணி நிரப்­பப்­ப­டா­தது குறித்து அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!