கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்நிறைய நிலவரப்படி, மேலும் 79 பேர் கொவிட்-19 தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். இதையும் சேர்த்து அங்கு இதுவரை 28,138 பேர் தொற்றுப்பாதிப்பால் மரணமடைந்துவிட்டனர். தொற்று மரண எண்ணிக்கையில் பெர்லிஸ் மாநிலம்தான் முன்னிலையில் உள்ளது. அங்கு ஒரு மில்லியன் பேருக்கு 75 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கடுத்தபடியாக சரவாக் 53 மரணங்களுடன் இரண்டாவது இடத்திலும், பினாங்கு 40 மரணங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. கடந்த பதினான்கு நாட்களில் சரவாக் மாநிலத்தில் மட்டும் 150 பேரும், ஜோகூர் பாருவில் 109 மரணங்களும் மூன்றாவதாக சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் 91 மரணங்களும் பதிவாகியுள்ளன. அவர்களில் 68.5 விழுக்காட்டினர் தடுப்பூசி போடாதவர்கள் என்றும் 21.5 விழுக்காட்டினர் ஒரு முறை தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும் 10 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
மலேசியா: மேலும் 79 தொற்று மரணம்
1 mins read
-

