கருத்துக்கணிப்பு: ஜப்பான் தேர்தலில் கிஷிடாவே வெல்வார்

கருத்துக்கணிப்பு: ஜப்பான் தேர்தலில் கிஷிடாவே வெல்வார்

1 mins read
63f1b924-30a4-41d7-9131-b9a6718ab0a7
-

தோக்­கியோ: ஜப்­பா­னில் ஆளும் முற்­போக்கு ஜன­நா­ய­கக் கட்சி, அக்­டோ­பர் 31ஆம் தேதி நடக்­க­வி­ருக்­கும் பொதுத்­தேர்­த­லில் வெற்றி பெற்று நாடா­ளு­மன்­றத்­தில் தனது இடத்­தைத் தக்­க­வைத்­துக் கொள்­ளும் என்று தேர்­தல் கருத்­துக் கணிப்பு கூறு­கிறது.

கியோடோ நியூஸ் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்­தி­யது. இதே­போன்று மற்ற ஊட­கங்­களின் கருத்துக்கணிப்பிலும் முற்­போக்கு ஜன­நா­ய­கக் கட்­சி­யும் அதன் துணைக் கட்­சி­யான கொமைட்டோ கட்­சி­யும் பெரும்­பான்மை இடங்­க­ளைக் கைப்­பற்­றும் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தத் தேர்­த­லில் ஆக அதி­க­மாக 465 இடங்­க­ளைக் கைப்­பற்றி சக்­தி­வாய்ந்த நாடா­ளு­மன்­றத்தை முற்­போக்கு ஜன­நா­ய­கக் கட்சி அமைக்­கும் என்று கருத்­துக்­க­ணிப்­பு­கள் மூலம் தெரிய வந்­துள்­ள­தாக அந்த ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

கருத்­துக்­க­ணிப்­புக்­கான வாக்­கெ­டுப்­பின்­போது 54 விழுக்­காட்­டி­னர் கிஷி­டா­வுக்கு (படம்) ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்,

பதினான்கு விழுக்­காட்­டி­னர் மட்­டும் எதிர்க்­கட்­சித் தலை­வர் யுகியோ எடா­னோ­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

கருத்­துக்­க­ணிப்பு வாக்­கெ­டுப்­பில் 58 விழுக்­காட்­டி­னர் சிடிபி கட்­சிக்கு அர­சாங்­கத்தை நடத்­தும் அள­வுக்கு போது­மான திறன் இல்லை என்று கூறி­ய­தாக அந்த நிறு­வ­னம் தெரி­வித்­தது.