‘2022லும் கொரோனா நீடித்திருக்கும்’

நியூ­யார்க்: குறைந்த வரு­மான நாடு­க­ளுக்­குப் போதிய அள­வில் தடுப்­பூசி கிடைக்­கா­த­தால் அடுத்த ஆண்­டி­லும் கொவிட்-19 பெருந்­தொற்று நீடித்­தி­ருக்­கும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

மற்ற கண்­டங்­களில் 40% மக்­கள் தடுப்­பூசி போட்­டு­விட்ட நிலை­யில், ஆப்­பி­ரிக்­கா­வில் இன்­னும் ஐந்து விழுக்­காட்­டி­னர்க்­குக்­கூட தடுப்­பூசி போடப்­ப­ட­வில்லை.

உல­க­ள­வி­லான தடுப்­பூசி எண்­ணிக்­கை­யில் 2.6% மட்­டுமே ஆப்­பி­ரிக்­கா­வில் போடப்­பட்­டுள்­ள­தாக பிபிசி செய்தி கூறு­கிறது.

இத­னால், மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் தடுப்­பூசி வழங்­கு­வ­தில் குறைந்த வரு­மான நாடு­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்க ஏது­வாக, பணக்­கார நாடு­கள் வரி­சை­யில் தங்­க­ளது நிலையை விட்­டுக்­கொ­டுக்க வேண்­டும் என்­றும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் மூத்த தலை­வ­ரான டாக்­டர் புரூஸ் ஐல்­வர்ட் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

மருந்து நிறு­வ­னங்­களும் பணக்­கார நிறு­வ­னங்­களும் உறு­தி­ய­ளித்­த­தில் ஏழில் ஒரு தடுப்­பூசி மட்­டுமே ஏழை நாடு­க­ளைச் சென்­ற­டைந்­துள்­ளது என்று தடுப்­பூசி நன்­கொ­டைக்­கான 'பீப்­பல்ஸ் வேக்­சின்' அமைப்பு தெரி­வித்து இருக்­கிறது.

ஆப்­பி­ரிக்க கண்­டத்­தில் நேற்­றைய நில­வ­ரப்­படி கொவிட்-19 தொற்­றுப் பாதிப்பு 8.5 மில்­லி­யனை நெருங்­கு­கிறது. இதனை அந்­நாட்­டின் நோய் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு நிலை­யம் கூறி­யது.

கொரோனா தொற்றால் அங்கு இது­வரை 216,013 பேர் பலி­யாகி விட்­ட­னர். 7,824,863 பேர் குண­மா­கி­யுள்­ள­னர் என்று அந்­நி­லை­யம் கூறி­யது.

தென்­னாப்­பி­ரிக்கா, மொரோக்கோ, துனீ­சியா, எத்­தி­யோப்­பியா ஆகிய ஆப்­பி­ரிக்க நாடு­க­ளி­லேயே அதி­க­மான தொற்று பதி­வா­கி­யுள்­ளது.

ஆப்­பி­ரிக்­கக் கண்­டத்­தில் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் மட்­டும் 2,9017,255 பேரை கொரோனா தொற்­றி­யுள்­ளது. வட­ஆப்­பி­ரிக்­கா­வின் மொரோக்­கோ­வில் 942,779 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஆப்­பி­ரிக்­கா­வின் தென்­ப­கு­தியே மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்று அந்­நி­லை­யம் தெரி­வித்­தது.

1.37 பில்­லி­யன் மக்­கள் தொகை­யைக் கொண்ட ஆப்­பி­ரிக்­கா­வில் இது­வரை 175 மில்­லி­யன் பேருக்­குத்­தான் கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

119 மில்­லி­யன் தடுப்­பூசி மருந்­து­களை அந்­நாடு விலை­கொ­டுத்து வாங்­கி­யுள்­ளது.

111 மில்­லி­யன் கோவேக்ஸ் திட்­டத்­தின் மூல­மும் 31.2 மில்­லி­யன் தடுப்­பூசி நன்­கொடை மூல­மும் கிடைத்­துள்­ளன.

ஆப்­பி­ரிக்­க நாடுகளில் 100 பேருக்கு 4 பேர்­தான் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!