இந்தோனீசியாவில் பயணக் கட்டுப்பாடு கடுமையாகிறது

ஜகார்த்தா: ஆண்­டி­றுதி விடு­மு­றை­யில் அதி­க­மா­னோர் பய­ணம் செய்­வர் என்­ப­தால் மீண்­டும் கொவிட்-19 பர­வல் வேக­மெ­டுக்­கச் சாத்­தி­ய­முள்­ளது. அத­னைத் தடுக்­கும்­வி­த­மாக, விமா­னப் பய­ணக் கட்­டுப்­பா­டு­களை இந்­தோ­னீ­சியா கடு­மை­யாக்கி வரு­கிறது.

கொரோனா தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­படும் பய­ணி­க­ளுக்­கென, அவர்­கள் புறப்­பாட்­டிற்­கு­முன் 'தொற்று இல்லை' எனச் சான்று அளித்­தி­ருந்­தா­லும், தனி­யாக இருக்­கை­களை ஒதுக்க வேண்­டும் என்று விமா­னப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட, பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்ற பய­ணி­கள் மட்­டுமே விமா­னங்­களில், குறிப்­பாக பாலி, ஜகார்த்தா பகு­தி­க­ளுக்­கான விமா­னங்­களில் அனு­ம­திக்­கப்­பட வேண்­டும் என்று அந்­நாட்­டின் கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் பேச்­சா­ளர் விக்கு அடி­சாஸ்­மிட்டோ தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா தொற்­றும் உயி­ரி­ழப்பும் குறைந்து வரு­வ­தை­ய­டுத்து, இந்­தோ­னீ­சியா மீண்­டும் தனது அனைத்­து­லக எல்­லை­க­ளைத் திறந்­து­வி­டத் தொடங்­கி­யுள்­ளது. பொரு­ளி­யலை மீட்­டெ­டுக்­கும் வித­மாக, கிரு­மித்­தொற்­றுக் கட்­டுப்­பா­டு­களில் பல­வற்­றை­யும் அது தளர்த்­தி­யி­ருக்­கிறது.

அத்­து­டன், பய­ணத்­து­றைக்­குப் புத்­து­யிர் அளிக்­கும் வகை­யில், 19 நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு பாலி, ரியாவ் தீவு­க­ளின் கத­வு­கள் கடந்த வாரம் முதல் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!