கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஜோகூர்

கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஜோகூர்

1 mins read
35dc8703-88d8-4d9e-a970-34e4abacbdad
செப்டம்பர் 24ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், வெறிச்சோடி காணப்படும் ஜோகூர் பாரு ரயில் நிலையம். படம்: ஷஹ்ரி அஸ்ருல் ஹார் -

மலேசியாவின் ஜோகூர், திரங்கானு மாநிலங்கள் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 25) கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்றன.

தேசிய மீட்சித் திட்டத்தில் மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காம் கட்டத்திற்கு அவை மாறுகின்றன. நான்காம் கட்டத்தில் பொது, தனியார் துறை வேலையிடங்கள் 100 விழுக்காடு இயங்கலாம். தற்போது, அது 80 விழுக்காடாக உள்ளது.

நேரடி நிகழ்ச்சிகள், திருமண உபசரிப்பு நிகழ்வுகள் போன்ற சமூக நடவடிக்கைகளும் நடைபெற அனுமதி வழங்கப்படும். அவை 50 விழுக்காடு இயங்கலாம்.

மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்