சிங்கப்பூரிலிருந்து செல்வோருக்கு தனிமைப்படுத்தல் கிடையாது

பேங்­காக்: சிங்­கப்­பூர் உள்­ளிட்ட 46 நாடு­களில் இருந்து வரும் முழுமையாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் தனி­மைப்­

ப­டுத்­திக்­கொள்ளத் தேவை­யில்லை என்று கூறி­யுள்­ளார் தாய்­லாந்து பிர­த­மர் பிர­யுத் சான்-ஓ-சா.

ஏற்­கெ­னவே தென்­கொ­ரியா, ஹாங்­காங், இஸ்­ரேல் உள்­ளிட்ட பத்து நாடு­களில் இருந்து வரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தேவை­யில்லை என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், தற்­போது அது 46 நாடு­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

குறைந்து வரும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள், அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தால், வெளி­நாட்டுப் பய­ணி­க­ளுக்கு அனு­மதி அளிக்க முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டது.

நாட்­டின் சுற்­று­லாத் துறையை மேம்­ப­டுத்­தும் வகை­யில், வரும் நவம்­பர் 1ஆம் தேதி முதல் பிரிட்­டன், அமெ­ரிக்கா, சீனா, சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட நாடு­களில் இருந்து செல்­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­த­லில் இருந்து தாய்­லாந்து விலக்கு அளித்­துள்­ளது.

விமா­னப் பய­ணி­யா­க­வும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வ­ரா­க­வும், கிரு­மித்­தொற்று இல்லை என்­ப­தற்­கான சான்­றி­தழ் வைத்­தி­ருப்­ப­வரா­க­வும் இருக்­கும் பட்­சத்­தில் தாய்­லாந்து வரும் ஒரு­வர் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள தேவை­யில்லை என்று அந்­நாட்டுப் பிர­த­மர் கூறி­யுள்­ளார்.

முன்­னோடித் திட்­ட­மாக சென்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி புக்­கெட் தீவு மட்­டும் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­பட்­டது.

தாய்­லாந்­தின் முக்­கி­யச் சுற்­று­லாத்­த­லங்­க­ளான பேங்­காக், ஹூவா ஹின், பட்­டாயா ஆகிய நக­ரங்­களில் முடக்­க­நிலை உத்­த­ரவு இம்­மாத இறு­தி­யில் நீக்­கப்­படும்.

கடு­மை­யான பய­ணக் கட்­டுப்­பா­டு­கள், தனி­மைப்­ப­டுத்­தல் கார­ண­மாக தாய்­லாந்­தில் கடந்த சில மாதங்­களில் கிரு­மிப் பர­வல் ஓர­ளவு கட்­டுக்­குள் இருந்­தது.

ஆனால், 2019ல் ஈர்க்­கப்­பட்ட சுமார் 40 மில்­லி­யன் சுற்­று­லாப் பய­ணி­கள் என்ற எண்­ணிக்­கையை, அது வெகு­வாக பாதித்­தது.

இத­னால் கடந்த ஆண்டு தாய்­லாந்து சுற்­று­லாத் துறை $50 பில்­லி­யன் வரு­வாய் இழப்பு கண்­டது, அதா­வது 82 விழுக்­காடு சரிந்­

தது.

இந்த ஆண்டு வெறும் 100,000 வெளி­நாட்டுப் பய­ணி­களே வரக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­

வ­தாக அந்­நாட்டு சுற்­று­லாத் துறை கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!