லங்காவிக்கு செல்ல அனைத்துலக பயணிகளுக்கு அனுமதி

லங்­காவி: மலே­சி­யா­வின் லங்­காவி சுற்­று­லாத்­த­லத்­திற்கு வரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனைத்­து­ல­கப் பய­ணி­கள் வரும் 15ஆம் தேதி முதல் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள தேவை­யில்லை என்று கொவிட்-19 சிறப்­புக் குழு சந்­திப்­பிற்­குப் பிறகு பேசிய மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் கூறி­னார்.

மலே­சி­யா­வின் சுகா­தார அமைச்சு, வெளி­யு­றவு அமைச்சு, குடி­நு­ழைவுத் துறை ஆகி­ய­வற்­றால் அனு­ம­திக்­கப்­பட்ட நாடு­களில் இருந்து வரும் பய­ணி­கள் குறைந்­தது 80,000 அமெ­ரிக்க டாலர் மதிப்­பி­லான காப்­பீடு வைத்­தி­ருப்­ப­தும் அவர்­கள் லங்­கா­வி­யில் குறைந்­த­பட்­சம் மூன்று நாட்­கள் தங்­கி­யி­ருக்க வேண்­டி­ய­தும் அவ­சி­யம்.

கொவிட்-19 தொற்று இல்லை என்­ப­தற்­கான சான்­றி­த­ழோடு நேராக லங்­கா­விக்­குச் செல்­லும் பய­ணி­கள் இரண்­டா­வது நாளில் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என்­ப­தும் பயண ஏற்­பாட்­டிற்­கான செயற்­பாட்டு நடை­மு­றை­களில் ஒன்று.

இந்த முன்­னோ­டித் திட்­டத்தை ஆராய்ந்த பிறகு, இது மற்ற பகு­தி­க­ளுக்­கு விரி­வு­ப­டுத்­தப்­படும் என்­றும் இஸ்­மா­யில் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!