தைவானுக்கு நிச்சயமாக பாதுகாப்பு அளிப்போம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

பால்­டி­மோர்: சீனா தாக்­கி­னால், தைவா­னிற்கு நிச்­ச­ய­மாக அமெ­ரிக்கா பாது­காப்பு அளிக்­கும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

தைவான்-சீனா இடையே தொடர்ந்து பதற்­ற­மான சூழல் நில­வும் நிலை­யில் அதி­பர் பைடன் இத­னைக் கூறி­யுள்­ளது சீனா­வின் கோபத்தை மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

"தைவானை பாதுகாப்பதற்கான பொறுப்பு எங்களுக்கு இருக்­கிறது. தைவா­னு­ட­னான எங்­கள் உற­வில் எந்த மாற்­ற­மும் இல்லை. சீனா தைவானைத் தாக்­கி­னால் நாங்­கள் நிச்­ச­ய­மாக தைவா­னிற்­குப் பாது­காப்பு அளிப்­போம்," என்று சிஎன்என் நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய பைடன் சொன்­னார்.

அப்­போது, சீனா­வின் ராணுவ, அர­சி­யல் நெருக்­கடி அதி­க­ரித்து வரு­வ­தாக தொடர்ந்து குற்­றம் சாட்டி வரும் தைவா­னின் பாது­காப்­பிற்கு அமெ­ரிக்கா துணை நிற்­குமா என்று கேட்­கப்­பட்ட கேள்­விக்­குப் பதில் அளித்தபோது அவர் இவ்­வாறு சொன்­னார்.

பைடன் இவ்­வாறு கூறி­ய­தற்­குப் பிறகு பேசிய வெள்ளை மாளிகை செய்­தித் தொடர்­பா­ளர், "தைவா­னு­ட­னான கொள்­கை­யில் எந்த மாற்­ற­மும் இல்லை. உடன்­ப­டிக்கை கொள்­கைக்கு உட்­பட்டு எங்­கள் உறு­திப்­பாட்டை நிலை­நி­றுத்­து­வோம். தைவா­னின் தற்­காப்­பிற்கு நாங்­கள் எப்­போ­தும் துணை நிற்­போம்," என்­றார்.

சட்டப்படி, தைவான் தன்னை தற்­காத்­துக் கொள்­வ­தற்­குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளை­யும் வா‌ஷிங்­டன் வழங்க வேண்­டும் என்­றா­லும், சீனா தாக்­கு­தல் நடத்­தி­னால், தைவா­னைப் பாது­காக்க ராணுவ ரீதி­யாக அமெ­ரிக்கா தலை­யி­டுமா என்ற தெளி­வற்ற நிலை நீண்ட கால­மாக உள்­ளது.

பைட­னின் கூற்­றுக்­குப் பிறகு பேசிய சீன வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் வாங் வென்­பின், தைவா­னின் சுதந்தி­ரத்தை விரும்­பு­ப­வர்­க­ளுக்­குத் தவ­றான குறிப்­பு­களை பகிர்­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்று அமெ­ரிக்­காவை வலி­றுத்­தி­யுள்­ளார்.

சீனா­வின் நலன் என்று வரும்­போது எந்தச் சலு­கை­க­ளுக்­கும் இட­மில்லை என்­றும் அவர் சொன்­

னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!