செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5af1453f-5084-48cb-967d-f6b4c98952cc
-
Google News Preferred Icon

நியூசிலாந்தில் புதிய உச்சம்

வெலிங்டன்: நியூசிலாந்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கிருமித்தொற்று சம்பவங்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று புதிதாக 129 பேர் தொற்றுக்கு ஆளாகினர். அவர்களில் 120 பேர் ஆக்லாந்தையும் ஒன்பது பேர் அண்டை நகரமான வைகாட்டோவையும் சேர்ந்தவர்கள்.

இந்நகரங்களில் மூன்றாம் கட்ட முடக்கநிலையும் நாட்டின் பிற பகுதிகளில் இரண்டாம் கட்ட முடக்கநிலையும் நடப்பில் உள்ளது. அத்துடன், 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகுதான், நியூசிலாந்தில் முடக்கநிலை தளர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கிலும் பரவிய தொற்று

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கிருமித்தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று பெய்ஜிங்கிலும் நான்கு தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் உள் மங்கோலியாவிற்கு சென்றுவிட்டு பெய்ஜிங்கிற்குத் திரும்பியவர்கள் என்று சுகாதார ஆணையம் கூறியது.

சீனாவின் தற்போதைய கிருமிப் பரவல் சம்பவங்கள் உள் மங்கோலியாவில் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், நேற்று அப்பகுதியில் மட்டும் 15 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. சீனா முழுவதும் நேற்று 43 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதுதவிர 26 அறிகுறிகளற்ற தொற்று சம்பவங்களும் நேற்று பதிவாகின.

நிலநடுக்கத்திற்கு மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய நியூசிலாந்துப் பிரதமர்

வெலிங்டன்: நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனை நேற்று நிலநடுக்கம் உலுக்கியது. அப்போது, அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், கொவிட்-19 நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிக்கொண்டு இருந்தார். நிலநடுக்கத்தை உணர்ந்த அவர், ஒரு சில வினாடிகளுக்கு உரையை நிறுத்திக்கொண்டு பின்னர் தொடர்ந்தார். ரிக்டர் அளவில் 5.9 என பதிவான நிலநடுக்கம் வெலிங்டனையும் அதன் அருகிலுள்ள பகுதிகளையும் உலுக்கியது. எனினும், கட்டடங்களுக்குச் சேதம் அல்லது மக்களுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல் எதுவும் இல்லை.

படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒளிப்பதிவாளர் பலி, இயக்குநர் காயம்

ஹாலிவுட் திரைப்படமான 'ரஸ்ட்' என்ற படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடந்தது. இதில் அலெக்ஸ் பால்ட்வின் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டை காட்சிக்காக துப்பாக்கியால் சுட்டபோது அந்தத் துப்பாக்கியில் இருந்த குண்டு ஒன்று எதிர்பாராதவிதமாக ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் என்பவரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இன்னொரு குண்டு இயக்குனர் ஜோயல் சோசா மீது பட்டதைடுத்து அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.