வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கதவைத் திறக்கும் மலேசியா

வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கதவைத் திறக்கும் மலேசியா

1 mins read
4aa28c57-2bf0-4118-9f50-8c046374c82d
-

வெளி­நாட்டு ஊழி­யர்­களை அனு

மதிப்­ப­தற்­கான மனித வள அமைச்­சின் செயல்­பாட்டு நடை­முறை

களுக்கு மலே­சிய அர­சாங்­கம் அனு­மதி அளித்­துள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உலக சுகா­தார அமைப்பு அனு­மதி வழங்­கிய தடுப்­பூ­சியை முழு­மை­யாக போட்­ட­வ­ராக இருப்­ப­தும் அதற்­கான சான்­றி­த­ழும் அவ­சி­யம்.

அத்­து­டன் சுகா­தார அமைச்சு பரிந்­து­ரைக்­கும் காலத்­திற்கு, அர­சாங்க மையங்­களில் அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய தனி­மைப்­ப­டுத்­தல் காலம் 7 நாட்­க­ளா­கும்.

வெளி­நாட்­டு ஊழி­யர்­க­ளுக்­கான ஒதுக்­கீடு, அனு­ம­திப்­ப­தற்­கான தேதி­கள் ஆகி­யவை உள்­துறை அமைச்சு, மனித வள அமைச்­சின் கூட்டு முடி­வுக்கு உட்­பட்­டவை என்­றும் பிர­த­மர் இஸ்­மா­யில் சொன்­னார்.