ஐவரி கோஸ்ட்டில் நால்வர் உயிரைப் பறித்த கனமழை

ஐவரி கோஸ்ட்டில் நால்வர் உயிரைப் பறித்த கனமழை

1 mins read
475c8a0d-4ab8-49bf-bc58-a799fbbcaecb
-
Google News Preferred Icon

யமோசோக்ரு: ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் பெய்த கனமழை காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்தன.

பொருட்சேதம் மட்டுமின்றி உயிர்ச்சேதமும் ஏற்பட்டது.

கனமழை காரணமாக நான்கு பேர் மாண்டனர். தங்கள் வீடுகள் தரைமட்டமானதைக் கண்டு பலர் கதறி அழுதனர். இடிபாடுகளை அகற்றும் பணிகளில் கிராமவாசிகளும் அதிகாரிகளும் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது. மீண்டும் இத்தகைய பேரிடர் நிகழக்கூடும் என்று பலர் அஞ்சுவதாக தெரிவிக்கப்பட்டது.

இடிந்துபோன தமது வீட்டைப் பார்த்து மீளாத் துயரில் கண்ணீர்விட்டு அழுத கிராமவாசி. படம்: ஏஎஃப்பி