பெர்லின்: கொவிட்-19 அபாயமுள்ள நாடாக சிங்கப்பூரை ஜெர்மனி வகைப்படுத்த இருக்கிறது.
பல்கேரியா, கெமரூன், குரோவேஷியா, காங்கோ குடியரசு ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூரும் கொவிட்-19 அபாயமுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இந்தத் தகவலை ஜெர்மனியின் சுகாதார அமைச்சு, வெளியுறவு அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவை இணைந்து நேற்று வெளியிட்டன.
இருப்பினும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்படாமல் ஜெர்மனிக்குள் அனு
மதிக்கப்படுவர் என்று சிங்கப்பூரில் உள்ள ஜெர்மன் தூதரகம் தெரிவித்தது. ஆனால் ஜெர்மனிக்குள் நுழைவதற்கு முன்பு கட்டாயமாக மின்னிலக்கப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னிலக்கப் பதிவு செய்துகொள்ளும்போது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரம், கிருமித்தொற்றால் பாதிப்பு இல்லை என்று காட்டும் பரிசோதனை முடிவு அல்லது கிருமித்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்துவிட்டதாகக் காட்டும் ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் ஜெர்மனிக்குச் செல்வதற்கு முன்பு ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெர்மன் தூதரகம் கூறியது.

