முகக்கவசம் அணிய அரசியல்வாதிகளுக்கு நினைவூட்டிய மலேசிய சுகாதார அமைச்சர்

முகக்கவசம் அணிய அரசியல்வாதிகளுக்கு நினைவூட்டிய மலேசிய சுகாதார அமைச்சர்

1 mins read
b482f0ad-027b-4892-8ce9-534fed574272
-

கோலா­லம்­பூர்: மலே­சிய அர­சி­யல்­வா­தி­கள் பல­ருக்கு நீரி­ழிவு நோய், உயர் ரத்த அழுத்­தம், இருப்­ப­தா­லும் பலர் உடல்­ப­ரு­ம­னு­டன் இருப்­ப­தா­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு கடு­மை­யான பாதிப்பு ஏற்­ப­டா­மல் இருக்க முகக்­

க­வ­சத்தை அணிந்து கொள்­ளும்­படி அந்­நாட்­டின் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் நினை­வூட்­டி­யுள்­ளார்.

பிரிட்­ட­னில் சிலர் முகக்­க­வ­சம் அணிய மறுப்­ப­தால் அங்கு புதி­தாக கொவிட்-19 அலை ஏற்­பட்­டுள்­ள­தாக திரு கைரி கூறி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிற­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் சிர­மப்­பட வேண்­டி­யி­ருக்­கும் என்­றார் அவர்.

கூட்­டங்­கள், கலந்­து­ரை­ய­டல்­களில் முகக்­க­வ­சம் அணி­யாத அர­சி­யல்­வா­தி­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரிப்­ப­தாக அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.