அதிவிரைவு ரயில் திட்டம்: சிங்கப்பூர் இருப்பது அவசியம்

1 mins read
3bd307a8-1f87-4c93-9f11-4b04eae44a9c
-

கோலா­லம்­பூர்: கோலா­லம்­பூர்-ஜோகூர் பாரு அதி­வி­ரைவு ரயில் கட்­ட­மைப்­பில் சிங்­கப்­பூ­ரும் சேர்த்­துக் கொள்­ளப்­பட வேண்­டும் என்று அம்னோ உத­வித் தலை­வ­ரான முகம்­மது காலிட் நூர்­டின் தெரி­வித்­துள்­ளார்.

அந்த ரயில் பாதை­யில் சிங்­கப்­பூர் இடம்­பெ­றா­விட்­டால் ரயில் பாதை­யைக் கட்ட எடுத்த முயற்சிகளுக்குப்

பய­னில்­லா­மல் போய்­வி­டும் என்று ஜோகூர் மாநி­லத்­தின் முன்­னாள் முதல்­வ­ரான திரு காலிட் நூர்­டின் கூறி­னார். மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ருக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே அதி­வி­ரைவு ரயில் சேவை­யைத் தொடங்க முத­லில் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் பிறகு அந்­தத் திட்­டம் கைவி­டப்­பட்டு ரயில் பாதையை ஜோகூர் பாரு­வில் முடித்­துக்­கொள்ள முடி­வெ­டுக்­கப்­பட்­டது.