நியூசிலாந்தின் தென்தீவில் கொவிட்-19 பாதிப்பு

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி மேலும் 104 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் ஒரு­வர் நாட்­டின் தென்­தீ­வைச் சேர்ந்­த­வர். கிட்­டத்­தட்ட ஓராண்­டுக்­குப் பிறகு நியூ­சி­லாந்­தின் தென்­தீ­வில் சமூக அள­வில் ஒரு­வர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல்­முறை.

நியூ­சி­லாந்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் பெரும்­பா­லா­னோர் ஆக்­லாந்து நக­ரைச் சேர்ந்­த­வர்­கள். அந்­ந­க­ரத்­தில் கடந்த இரண்டு மாதங்­க­ளாக முடக்­க­நிலை அமல்படுத்தப்

­பட்­டுள்­ளது. நியூ­சி­லாந்­தின் மற்ற பகு­தி­களில் கட்­டுப்­பா­டு­கள் அமல்படுத்தப்பட்டிருந்த­போ­தி­லும் அவை ஆக்­லாந்­தில் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளைப்­போல் கடு­மை­யா­ன­தல்ல. தென்­தீ­வில் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­போ­தி­லும் அவ­ரி­ட­மி­ருந்து மற்­ற­வர்­க­ளுக்­குக் கிருமி பர­வும் சாத்­தி­யம் குறை­வாக இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். பாதிக்­கப்­பட்­ட­வர் குண­ம­டை­யும் நிலை­யில் இருப்­ப­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

அவ­ரு­டன் சிலர்­தான் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தா­க­வும் அவர்­கள் உட­ன­டி­யாக அடை­யா­ளம் காணப்­பட்டு தனி­மைப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக நியூ­சி­லாந்­தின் சுகா­தார அமைச்சு கூறி­யது.

மக்­கள்­தொ­கை­யில் 90 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு கடு­மை­யான முடக்­க­நிலை முடி­வுக்­குக் கொண்டு வரப்­படும் என்று நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசின்டா ஆர்­டர்ன் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

நேற்­றைய நில­வ­ரப்­படி மக்­கள்­தொ­கை­யில் 70 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி

போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!