முன்னேறும் விக்டோரியா

மெல்பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் 90 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போட்ட பிறகு கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் பெரிய அள­வில் தளர்த்­தப்­படும் என்று அம்­மா­நி­லத்­தின் முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார். அடுத்த மாதம் 24ஆம் தேதிவாக்கில் இந்த தடுப்­பூசி இலக்கை விக்­டோ­ரியா அடை­யும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

கட்­டுப்­பா­டு­கள் எந்த அளவிற்கும் தளர்த்தப்படலாம் என்று விக்­டோரியா­ முத­ல­மைச்­சர் டேனி­யல் ஆண்ட்­ரூஸ் கூறி­னார். கிரு­மிப் பர­வல் அதி­கம் ஏற்­படக்கூடிய அபா­யம் இருக்­கும் பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள், மருத்­து­வ­ம­னை­கள் போன்­ற­வற்­றில் மட்­டும்­தான் முகக்­க­வ­சம் அணி­ய­வேண்­டிய அவ­சி­யம் இருக்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும், அத்­தி­யா­வ­சி­யச் சேவை­களை வழங்­காத சில்­லறை வர்த்­த­கக் கடை­க­ளுக்­குச் செல்ல முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு மட்­டுமே தொடர்ந்து அனு­மதி வழங்­கப்­படும்.

நேற்று முன்தின நிலவரப்படி விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 1,935 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. கிருமித்தொற்று ஏற்பட்டிருந்த 11 பேர் மாண்டனர்.

விக்­டோ­ரி­யா­வில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போட்­ட­வு­டன் மக்­கள் அம்­மா­நி­லத்­திற்­குள் எங்கு வேண்­டு­மா­னா­லும் சென்று வர­முடியும். இது­வரை பய­ணத் தடை இருந்து வந்­துள்­ளது. விக்­டோ­ரி­யா­வில் பெரி­ய­வர்­களில் இது­வரை குறைந்­தது 73.7 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ளனர் என்­றும் குறைந்­தது 91.2 விழுக்­காட்­டி­னர் ஒரு முறை­யா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்­றும் திரு ஆண்ட்­ரூஸ் தெரிவித்­தார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­திலும் 90 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போட்ட பிறகு பெரும்­பாலான கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அம்­மா­நி­லம் வரும் டிசம்­பர் மாதம் ஒன்­றாம் தேதி­வாக்கில் இவ்­வி­லக்கை அடை­யும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. இம்மாதம் 11ஆம் தேதியன்று நியூ சவுத் வேல்ஸில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!