ஸ்காட் மோரிசனுக்கு முக்கிய ஆதரவு தரும் கூட்டணி கட்சி

ஸ்காட் மோரிசனுக்கு முக்கிய ஆதரவு தரும் கூட்டணி கட்சி

1 mins read
56b0fc2c-6125-48c7-a22f-7d8a89c249be
-

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லியா, 2050ஆம் ஆண்­டுக்­குள் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தை முழு­மை­யாக நிறுத்­தும் இலக்­கைக் கொண்­டுள்­ளது. அதற்கு ஆத­ர­வ­ளிக்­கப்­போ­வ­தாக அந்­நாட்­டின் ஆளும் கூட்­ட­ணி­யில் உள்ள ஆஸ்­தி­ரே­லிய தேசிய கட்சி கூறி­யுள்­ளது.

இது, ஸ்காட்­லாந்­தின் கிளாஸ்கோ நக­ரில் நடை­பெ­ற­வுள்ள பரு­வ­நிலை மாற்ற மாநாட்­டில் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் சம்­பந்­தப்­பட்ட தனது இலக்கை விரி­வு­ப­டுத்த வகை­செய்­யும்.