மியன்மார்: ஆசியான் அமைதிக்கு ஒத்துழைக்கத் தயார்

1 mins read
c42f4868-95ea-4fb8-a0c0-fda6091ff113
-

யங்­கோன்: ஆசி­யா­னில் அமை­தியை நிலை­நாட்­டு­வ­தற்கு வரை­யப்­பட்ட திட்­டத்­திற்­குத் தன்­னால் முடிந்­த­வரை இணங்­கப்­போ­வ­தாக மியன்­மா­ரின் ராணுவ அர­சாங்­கம் வாக்­கு­றுதி அளித்­துள்­ளது. திட்­டத்­திற்கு இணங்­கா­த­தால் சென்ற வாரம் நடை­பெற்ற மாநாடு ஒன்­றுக்கு மியன்­மா­ரின் தலைமை தள­பதி அழைக்­கப்­ப­டா­த­போது அந்­நாட்டு அர­சாங்­கம் இவ்­வாறு கூறி­யுள்­ளது.

பிற நாடு­க­ளு­டன் பகையை வளர்த்­துக்­கொள்­ளா­மல் அமைதி­யாக இருக்­கும் கொள்­கை­யைத் தான் நிலை­நாட்­டு­வ­தா­க­வும் கடந்த ஏப்­ரல் மாதம் ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட அமை­தித் திட்­டத்­தின் ஐந்து அம்­சங்­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­தில் ஆசி­யா­னு­டன் ஒத்­து­ழைக்­கப்­போ­வ­தா­க­வும் மியன்­மா­ரின் ராணுவ அர­சாங்­கம் அறி­வித்­தது.

அத்­திட்­டத்தை மியன்­மார் செயல்­ப­டுத்­தா­த­தால் மாநாட்­டில் மியன்­மார் தலை­வர் ஜென­ரல் மின் ஆவுங் ஹ்லாய்ங்­கைச் சேர்த்­துக்­கொள்­ள­வேண்டாம் என்று ஆசி­யான் உறுப்பு நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் இம்மாதம் 15ஆம் தேதியன்று முடி­வு­செய்­த­னர். பேச்­சு­வார்த்தை­யைத் தொடங்க முயற்சி செய்­வது, மனி­தா­பி­மான உதவிக்கு வகை­செய்­வது உள்­ளிட்ட அம்­சங்­கள் திட்­டத்­தில் அடங்­கும். கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதியன்று மியன்மாரின் ராணுவம் அந்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது.