சூடானில் ராணுவப் புரட்சி

ஹர்டோம்: சூடா­னில் இடைக்­கால அர­சாங்­கத்தை கலைத்து ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யி­ருக்­கிறது.

அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்துள்ள ராணுவம், அவசரகால நிலையை அறிவித்து உள்ளது.

இதனால் நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ராணுவத்துக்கு எதிராக அர சாங்க ஆதரவாளர்கள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர்.

சாலைகளில் டயர்களை அடுக்கி வைத்து அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் தலை நகரம் கரும்புகையில் மூழ்கியது.

நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் கல­வர பூமி­யா­னது.

அர­சி­யல் தலை­வர்­களை உள்ளடக்கிய கூட்டு மன்­றத்­துக்கு தலைமை வகித்து வந்த ஜென­ரல் அப்­டெல் ஃபட்டா புர்­ஹான், அர­சி­யல்­வாதிகளின் சண்­டையே ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணம் என்றார்.

நாட்டை நீண்­ட­கா­லம் ஆட்சி செய்த ஒமர் அல்-பஷிர் அர­சாங்­கம் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு தூக்கி எறி­யப்­பட்டு இடைக்­கால அர­சாங்­கம் அமைக்­கப்­பட்­டது. அப்­போ­தி­லி­ருந்து ராணு­வத்­துக்­கும் அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­கும் இைடயே மோதல் நீடித்து வரு­கிறது.

பிர­த­மர் அப்­தல்­லாஹ ஹம்­டோ­கும் சிறை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தடுப்­பு­களை உடைத்­துக் கொண்டு ராணு­வத் தலை­மை­ய­கத்­துக்கு அரு­கி­லுள்ள பகு­திக்­குள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் நுழை­வதை சில காணொ­ளிக்­காட்­சி­கள் காட்­டின.

ஃபேஸ்புக்­கில் வெளி­யான தொடர்பு அமைச்­சின் அறிக்­கை­யில் கூட்டு ராணு­வப்படை பலரை தடுப்­புக் காவ­லில் வைத்­துள்­ள­தா­க­வும் அடை­யா­ளம் தெரி­யாத இடத்­தில் அவர்­கள் தங்க வைக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தது.

ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு பிர­த­மர் ஹம்­டோகின் ஆதரவு கோரப் பட்டது. அதற்கு ஒத்­து­ழைக்க மறுத்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அமைதியான முறையில் போராடு மாறு தமது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்­கி­டையே சூடா­னுக்­கான இங்­கி­லாந்து தூதர், ஆட்­சிக் கவிழ்ப்பு, இடைக்­கால அர­சாங்­கத்­துக்­கும் நாட்டு மக்­க­ளுக்­கும் செய்­யப்­பட்ட துரோ­கம் என்று டுவிட்­டர் பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்கா, ஐநா, ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஆகி­யவை சூடான் நில­வ­ரம் குறித்து கவலை தெரி­வித்­துள்­ளன.

சூடான் முழு­வ­தும் இணை­யத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பெருநகரங்களில் சாலை யெங்கும் ராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர்.

தலை­ந­க­ரில் உள்ள அனைத்­து­லக விமான நிலை­யம் மூடப்­பட்டு அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்ளன.

2019ல் பல மாத ஆர்ப்பாட்டங் களுக்குப் பிறகு அதிபர் பஷிர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு ராணுவமும் இடைக்கால அதிகாரி களும் இணைந்து ஆட்சியை நடத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!