தோக்கியோ: புதிய பிரதமராக அண்மையில் பொறுப்பு ஏற்ற ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா முதல் முறையாக பின்னடைவைச் சந்தித்து உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரண்டு மேலவை உறுப் பினர்களுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஒன்றை பிரதமர் ஃபூமியோ கிஷிடாவின் ஆளும் கட்சி இழந்து உள்ளது.
அடுத்த சில வாரங்களில் பொதுத்தேர்தலைச் சந்திக்க விருக்கும் வேளையில் இந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சியின் செல்வாக்கை பிரதிபலிக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இரண்டில் ஓரிடத்தை இழந்துள்ளது பிரதமருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

