இந்தோனீசியாவின் பல பகுதிகளில் எல்லைகள் திறக்கப்படும்: ஜோகோ

இந்தோனீசியாவின் பல பகுதிகளில் எல்லைகள் திறக்கப்படும்: ஜோகோ

1 mins read
0e2e7c4a-3a58-473c-922f-1978b896216b
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 70 விழுக்­காட்டை தாண்­டி­யி­ருப்­ப­தால் நாட்­டின் பல பகு­தி­கள் வெளி­நாட்டுப் பய­ணி­க­ளுக்குத் திறக்­கப்­படும் என்று அந்­நாட்­டின் அதி­பர் ஜோகோ விடோடோ கூறி­யுள்­ளார்.

தென்­கி­ழக்கு ஆசியா கருத்­த­ரங்­கில் நேற்று அவர் உரை­யாற்­றி­னார்.

அப்­போது, பய­ணி­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களை தென்­கி­ழக்கு ஆசிய நாடு­கள் தளர்த்த வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார். எதிர்­கால சுகா­தார நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­வ­தும் அவ­சி­யம் என்று அதி­பர் ஜோகோ குறிப்­பிட்­டார்.

இம்­மா­தம் முற்­ப­கு­தி­யில் சீனா, நியூ­சி­லாந்து, ஜப்­பான் உள்­ளிட்ட சில குறிப்­பிட்ட நாடு­க­ளுக்கு பிர­பல சுற்­று­லாத் தல­மான பாலி­யின் எல்­லை­கள் திறக்­கப்­ப­டு­வ­தாக இந்­தோ­னீ­சியா அறி­வித்­தது.

அதன்­படி அக்­டோ­பர் 14ஆம் ேததி­யி­லி­ருந்து பாலி­யின் அனைத்­து­லக விமான நிலை­யம் வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்­குத் திறக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை பாலித் தீவுக்குப் பெரு­ம­ள­வில் சுற்­றுலா பய­ணி­கள் வந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வ­ரப்­படி 24 மணி நேரத்­தில் புதி­தாக 623 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­டது. இந்­தோ­னீ­சிய மக்­கள் தொகை­யில் இது­வரை 24 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர்.