செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
6f715fc2-627d-41f0-b5b6-370ddc001352
-

மலேசியாவில் தொற்று

5,000க்கும் கீழ் குறைந்தது

கோலாலம்பூர்: மலேசியாவில் தொற்று எண்ணிக்கை முதல் முறையாக ஜூன் 22ஆம் தேதிக்குப் பிறகு 5,000க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,782 புதிய சம்பவங்கள் பதிவாகின. அதாவது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 884 சம்பவங்கள் குறைவு. கடைசியாக ஜூன் 22ஆம் தேதி ஆகக் குறைவாக 4,732 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

'சிறார்கள் சமூக ஊடகங்களில் சேர பெற்றோர் அனுமதி தேவை'

சிட்னி: சமூக ஊடகங்களில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர அவர்களுடைய பெற்றோரிடமிருந்து சமூக ஊடகங்கள் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய திட்டத்தை ஆஸ்திரேலியா அரசாங்கம் நேற்று வெளியிட்டது.

இதனை மீறும் சமூக ஊடகங்களுக்கு பல மில்லியன் டாலர் அபராதம் விதிக்கவும் அத்திட்டம் வகை செய்கிறது.

ஃபேஸ்புக், ரெட்டிட், டேட்டிங் செயலி 'பம்பில்', ஃபேஸ்புக்குக்குச் சொந்தமான 'வாட்ஸ்அப்' உள்ளிட்டவை தரவுகளைச் சேகரிக்கும்போது குழந்தைகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் வயதை நிர்ணயிக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அவை எடுக்க வேண்டும் என்று புதிய வரைவுச் சட்டம் வலியுறுத்துகிறது.