அதிபர் ஸி: உலக அமைதிக்குப் பாடுபடுவோம்

பெய்ஜிங்: உலக அமைதிக்கு சீனா தொடர்ந்து பாடுபடும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு சீனா மீண்டும் திரும்பிய 50வது ஆண்டின் நிறைவைக் குறிக்கும் உரையில் அவர் பேசினார்.

உலக அமைதியையும் அனைத்துலக விதிகளையும் சீனா நிலைநாட்டும் என்று திரு ஸி உறுதி அளித்தார்.

வட்டாரச் சச்சரவுகள், பயங்கர வாதம், பருவமாற்றம், இணையப் பாதுகாப்பு மற்றும் உயிரினப் பாது காப்பு ஆகியவற்றில் உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

சீனாவின் அரசியல் முறையையும் உலகளாவிய அதன் பங்களிப்பையும் அவர் பாராட்டிப் பேசினார்.

அனைத்துலக விதிமுறைகளை குறிப்பிட்ட நாடுகள் மட்டும் தீர் மானிப்பதற்குப் பதிலாக ஐநாவின் 193 உறுப்பு நாடுகளும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.

சீனா எப்போதும் அமைதியான, நீதியை நிலைநாட்டக்கூடிய வெளி யுறவுக் கொள்கையை பின்பற்றி வருகிறது.

அதே சமயத்தில் ஒரு சில நாடுகள் மேலாதிக்கம் செலுத்து வதையும் அதிகார அரசியலையும் எதிர்க்கிறது," என்று சீன அதிபர் கூறினார்.

திரு ஸி தனது உரையில் அமெரிக்காவை வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ஆனால் அனைத்துலக விதிமுறைகளில் தனியொரு நாடு கட்டளையிட முடியாது என்று சீன அதிபர் மேலும் தெரிவித்ததாக ஸின் ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!